பருத்தித்துறை நகரில் நாளை மாவீரர் நாள் நினைவேந்தல்; மக்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு.!
பருத்தித்துறை நகரில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில், நகர்வாழ் மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் பேருந்து நிலைய பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளை மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வில், முதன்மைச் சுடர் ஏற்றும் நேரமான மாலை 6.05 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பருத்தித்துறை நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பொதுமக்களில், ஏனைய துயிலும் இல்லங்களுக்குச் செல்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.





