உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் 32 இளைஞர், யுவதிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கை செய்திகள் 16 வினாடிகள் முன்
1 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில்   சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு  18 வயதைத் தாண்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் குடியிருப்புப் பாதுகாப்பையும் உறுதி படுத்தும் நோக்கில், மன்னார் மாவட்டத்தில் 32 பயனாளிகளுக்கு  ‘திவியட்ட சேவியக் வீட்டுத்திட்டத்திற்கு’    காணி  உறுதி பத்திரம் ,வழங்கி வைக்கப்பட்ட தோடு,வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

 மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும்  திட்டத்தில்    போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்   பிமல் ரத்நாயக்க  பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ,மன்னார் நகர பிரதேச செயலாளர் காண்டீபன் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சிறுவர் இல்லங்களில் வளர்ந்து, 18 வயதிற்கு பின்னர் புதிய வாழ்க்கைப் பயணத்தை தனியாக தொடங்கும் இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் குடியிருப்பு மற்றும் வாழ்வாதார சவால்களை  கருத்திற்கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சொந்த வீடு, காணி உரிமை மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை, சமூக பாதுகாப்பையும் சம வாய்ப்புகளையும் விரிவு படுத்தும்  திட்டமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உரும்பிராயில் தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் நிகழ்வு.!

யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் தியாகி பொன்.சிவகுமாரன் சிலை அமைந்துள்ள பகுதியில், சந்தைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது…

28 0 0
இலங்கை செய்திகள்

ஆவரங்காலில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவிக்கும் நிகழ்வு ஆவரங்கால் சர்வோதய விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று புதன்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, அங்குள்ள நினைவுத் தூபி…

30 0 0
இலங்கை செய்திகள்

உணவு விற்பனை நிலையங்களில் விசேட சோதனை.!

மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களும் அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், மன்னாரில் சில உணவு விற்பனை நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய…

28 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகரில் நாளை மாவீரர் நாள் நினைவேந்தல்; மக்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு.!

பருத்தித்துறை நகரில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில், நகர்வாழ் மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர்…

28 0 0