‘ஷேக் ஹசீனாவுக்கு செக்’ : பங்களாதேஷ் திரும்பினால் கைது!
இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்குத் திரும்பினால், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என அந்த நாட்டு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஷமா ஒபைத் இஸ்லாம் தெரிவித்துள்ளார்
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஷேக் ஹசீனா நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில், அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்துமாறு பங்களாதேஷ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2024ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்துக்கு அமைய, இந்தியா அவரை பங்களாதேஷிடம் ஒப்படைக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


