உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போ*தைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் அவரது உதவியாளர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 24 நிமிடங்கள் முன்
105 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(22) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2,320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர் கல்முனை குடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கடந்த காலங்களில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சந்தேகநபரின் உதவியாளர்களாகச் செயற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளுக்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதுடன் அவர்கள் வசம் இருந்தும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சாய்ந்தமருது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் ஆலோசனையிலும் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம். இப்னு அசாரின் வழிகாட்டலிலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ். இந்திக தலைமையிலும் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

சாய்ந்தமருதில் புலமைப்பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு.!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது கமு/ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை…

107 0 0
அம்பாறை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

145 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

157 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

180 0 0