தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.
நீண்டகால சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் திகதி சென்னை MGM Healthcare மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளுக்குப் மத்தியிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.
இதையடுத்து இன்று பிற்பகல் 2:24 அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
வி.எஸ். பாபுவின் மறைவுக்கு MGM Healthcare மருத்துவமனை நிர்வாகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


