உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மஹிந்தவின் 81ஆவது பிறந்தநாள் : ரணில் தொலைபேசி மூலம் வாழ்த்து!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
122 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை தொலைபேசி ஊடாகத் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட ரீதியில் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது பிறந்தநாளுக்குரிய தனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ, 1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்தார் என்பதுடன், அவர் இன்று தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.

நாட்டின் ஜனாதிபதியாக 2005 முதல் 2015 வரை இரண்டு பதவிக்காலங்கள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்‌ஷ, பின்னர் நாட்டின் பிரதமராகவும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாலதி நினைவேந்தல் நிகழ்வு : முன்னாள் எம்.பி. கஜேந்திரன் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு, கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம்…

129 0 0
இலங்கை செய்திகள்

வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் என்று நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!

அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும், மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…

119 0 0
இலங்கை செய்திகள்

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25 ஆயிரத்தால் உயர்த்துமாறு கோரிக்கை

அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில், அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை…

128 0 0
இலங்கை செய்திகள்

பங்களாதேஷிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழைப்பு!

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விடுக்கப்பட்ட…

118 0 0