புனரமைக்கப்பட்ட விசுவமடு தொட்டியடி ஏற்று நீர்ப்பாசன திட்டம் பயனாளிகளிடம் கையளிப்பு!
மீள் புனரமைக்கப்பட்ட முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி ஏற்றுநீர்ப்பாசன திட்டம் விவசாயிகளிடம் இன்று கையளிக்கப்பட்டது.
வளமான நாடு! அழகான வாழ்க்கை! இதற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தொட்டியடி பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கிய ஏற்று நீர் பாசனத்திட்டம் மாகாணசபை குறித்தொதுக்கப்பட்ட 92 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2025 ஜூன் 16 ஆம் திகதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் விவசாயிகள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது .
வடமாகாண பதில் நீர்ப்பாசன பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவசிறீ, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கதிபர் அ.உமாமகேஸ்வரன், மன்மடங்கு வடமாக பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் ,விவசாயிகள் ஒரு குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன் விவசாயிகள் பொது அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர்.
குறித்த திட்டத்தில் 293 விவசாய குடும்பங்கள் 461ஏக்கர் விவசாயநிலங்கள் பயன்படுத்தப்படவுள்ளதுடன் குறித்த திட்டத்தின் ஊடாக இவர்களுக்கான வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட உள்ளது


