உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் திட்டமில்லை!

உலக செய்திகள் 10 மணி நேரம் முன்
101 பார்வைகள்

Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹுவாங் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட நிறுவனத்தின் முதல் காலாண்டு நிதி அறிக்கையில், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி கொலெட் கிரெஸ், நிறுவனத்தின் வழக்கமான செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றித் தொடர்வதாக முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், நிறுவனத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் திறன் தமக்கு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், Nvidia நிறுவனத்தின் காலாண்டு வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்து 115.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்திற்குப் பின்னரான பரிவர்த்தனைகளில் நிறுவனத்தின் பங்குகளின் விலை 4.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் இலாபமும் இருமடங்காக அதிகரித்துள்ளது.

ஒக்டோபர் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதியில், நிறுவனத்தின் இலாபம் 65 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

Nvidia நிறுவனத்தின் முக்கிய வருமான மூலங்களில் ஒன்றான தரவு மையங்கள் ஊடான வருமானமும் இருமடங்காக அதிகரித்து 107 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

எதிர்வரும் காலாண்டிலும் நிறுவனத்தின் வருமானம் மேலும் 13 வீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பதவி விலகிய ஜென்சன் ஹுவாங், மீண்டும் Nvidia நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகவும், அதனைத் தனது கௌரவமாகக் கருதுவதாகவும் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், நிறுவனத்தின் தலைவர் ஹார்வி ஜோன்ஸ், நிதி ஆய்வாளர்களுடனான கலந்துரையாடலின்போது, ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் நோக்கம் நிர்வாகக் குழுவுக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான உட்கட்டமைப்புகளின் தேவை குறைந்து வருவதாக முன்வைக்கப்பட்ட அச்சங்களுக்கு Nvidia-வின் நிதி முடிவுகள் வலுவான பதிலாக அமைந்துள்ளதாக Capital.com நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் டேனியலா ஹத்தோ தெரிவித்துள்ளார்.

மேலும், ஜென்சன் ஹுவாங் இல்லாமலும் நிறுவனத்தைத் திறம்பட வழிநடத்த முடியுமா என்ற முதலீட்டாளர்களின் உடனடி கவலைகளையும் இந்த நிதி முடிவுகள் ஓரளவு தணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹுவாங் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட நிறுவனத்தின் முதல் காலாண்டு நிதி அறிக்கையில், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி கொலெட் கிரெஸ், நிறுவனத்தின் வழக்கமான செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றித் தொடர்வதாக முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், நிறுவனத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் திறன் தமக்கு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், Nvidia நிறுவனத்தின் காலாண்டு வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்து 115.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்திற்குப் பின்னரான பரிவர்த்தனைகளில் நிறுவனத்தின் பங்குகளின் விலை 4.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் இலாபமும் இருமடங்காக அதிகரித்துள்ளது.

ஒக்டோபர் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதியில், நிறுவனத்தின் இலாபம் 65 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

Nvidia நிறுவனத்தின் முக்கிய வருமான மூலங்களில் ஒன்றான தரவு மையங்கள் ஊடான வருமானமும் இருமடங்காக அதிகரித்து 107 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

எதிர்வரும் காலாண்டிலும் நிறுவனத்தின் வருமானம் மேலும் 13 வீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பதவி விலகிய ஜென்சன் ஹுவாங், மீண்டும் Nvidia நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகவும், அதனைத் தனது கௌரவமாகக் கருதுவதாகவும் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், நிறுவனத்தின் தலைவர் ஹார்வி ஜோன்ஸ், நிதி ஆய்வாளர்களுடனான கலந்துரையாடலின்போது, ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் நோக்கம் நிர்வாகக் குழுவுக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான உட்கட்டமைப்புகளின் தேவை குறைந்து வருவதாக முன்வைக்கப்பட்ட அச்சங்களுக்கு Nvidia-வின் நிதி முடிவுகள் வலுவான பதிலாக அமைந்துள்ளதாக Capital.com நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் டேனியலா ஹத்தோ தெரிவித்துள்ளார்.

மேலும், ஜென்சன் ஹுவாங் இல்லாமலும் நிறுவனத்தைத் திறம்பட வழிநடத்த முடியுமா என்ற முதலீட்டாளர்களின் உடனடி கவலைகளையும் இந்த நிதி முடிவுகள் ஓரளவு தணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யாவில் இராணுவ வானூர்தி விபத்து – 19 பேரும் உயி@ரிழப்பு!

ரஷ்யாவின் தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ள கெமெரோவோ பிராந்தியத்தில், அன்-12 (An-12) இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான தகவலை…

93 0 0
உலக செய்திகள்

பல்கேரியா கடற்பரப்பில் எரிவாயுக் கப்பல் மூழ்கியது

கருங்கடலில் உள்ள பல்கேரியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் பயணித்த எரிவாயுக் கப்பலொன்று இன்று (17) மூழ்கியுள்ளது. எகிப்திலிருந்து ருமேனியா நோக்கிப் பயணித்த லைபீரியக் கொடியுடன் கூடிய ‘GAS…

94 0 0
உலக செய்திகள்

உயிருடன் திரும்புவேனா என்று தெரியவில்லை! : இம்ரான் கான்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது…

104 0 0
உலக செய்திகள்

இந்தியாவின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான்

இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஷாங்காய்  (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பின் கலாசார மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை…

100 0 0