உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
16 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மதுரையில் பிரபல நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி கைது!

இந்திய செய்திகள் 11 மணி நேரம் முன்
90 பார்வைகள்

இந்தியாவின் மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளார். 

கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 25 வயதுடைய நிஷாந்தின் நெருங்கிய தோழியாகக் கருதப்படும் மீனாட்சியுடன், நிஷாந்தின் தந்தையான சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் சுமார் ஆறு கிலோகிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி வந்த மீனாட்சி, இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை, கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான நிஷாந்த் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

அவரது செல்பேசி அணைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்காக ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கொள்ளைக்குப் பயன்படுத்திய ஆடைகளை நிஷாந்த் தனது குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் எரித்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

வரலாற்றைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு : சோனியாவின் நூலை எரித்து எதிர்ப்பு!

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது நூலை சீக்கிய அமைப்பினர்…

123 0 0
இந்திய செய்திகள்

பொலிஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

சட்டம் -ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க, பொலிஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் அமைப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில், த.வெ.க., அரசு பொறுப்பேற்ற…

108 0 0
இந்திய செய்திகள்

சோனியா காந்தியின் சுயசரிதை நூலுக்கு அமோக வரவேற்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘BELONGING: A JOURNEY OF LOVE’ புத்தகத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகக் கடைகளில் நூல்களை…

109 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் 3.86 கோடி பேருக்கு நீரிழிவு நோய்!

உலகம் முழுவதும் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது தொடர்பாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு புதிய ஆய்வை நடத்தியது. இந்தியாவில் 25…

109 0 0