மன்னார் டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி நடன பயிற்சி நிலையத்தின் சாதனைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு
மன்னார் மாவட்டத்தில் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி (Dazzling Diamonds Academy) நடன பயிற்சி நிலையத்தின் சாதனையாளர்களான நடன கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15) மன்னார் பெரிய கடை சனசமூக நிலைய கட்டிடத்தில் இடம் பெற்றது.
டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி (Dazzling Diamonds Academy) நடன பயிற்சி நிலையத்தின் இயக்குனர் அர்ஜீன் லெம்பேட் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது குறித்த அகாடமி ஊடாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றி சாதனை படைத்த சுமார் 30 நடன கலைஞர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு,சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக பல் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு நடன கலைஞர்களை கௌரவித்தனர்.
இதன் போது குறித்த நடன கலைஞர்களின் பல்வேறு நடன நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
















