தமிழ்த்தேசிய அடங்காப்பற்றாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் : சத்தியலிங்கம் எம்.பி இரங்கல்!
தமிழ்த்தேசிய அரசியலில் கொண்ட கொள்கையில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தனது இறுதி மூச்சுவரை தடம்மாறாது பயணித்த தமிழ்த்தேசிய பற்றாளன் அமரர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்,
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆரம்பத்தில் ஈழவிடுதலை போராளியாக, பாராளுமன்ற உறுப்பினராக, மாகாணசபை உறுப்பினராக, நகரசபை தலைவராக பல பதவிகளை வகித்தவர், அவர் பிறந்த வல்வெட்டித்துறை வீரம்விளைந்த மண்ணின் மைந்தனாய் இறுதிவரை தமிழ்மக்களின் உரிமைக்காக போராடியவர்.
இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் மீண்டுவருவார் என்ற நம்பிக்கையில் நாம் அனைவரும் இருந்தபோதிலும் அவரது மறைவு தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


