உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
16 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈழத் தமிழர்களின் விடுதலை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! – சிவாஜிலிங்கம் மறைவுக்குச் சிறீதரன் எம்.பி. இரங்கல்

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
89 பார்வைகள்

ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தான் வாழும் காலம் அத்தனையையும் அர்ப்பணித்த ஒரு பெருமனிதனின் மறைவு, ஈழத் தமிழர்களின் தேசிய இன விடுதலை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக மாறியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்த் தேசிய இன விடுதலையின் ஆரம்ப காலகட்டங்கள் முதல், போருக்குப் பின்னரான இற்றைவரையான காலப்பகுதி வரை தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்காகவும் மீட்சிக்காகவும் அவர் ஆற்றிய கைங்கரியங்கள் தமிழினத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகாலப் போராளியாக இணைந்து, பின்னர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக, நகர சபை உறுப்பினராக மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக எனத் தான் வகித்த பதவிகள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கான தொண்டுரிமையாக மாற்றியவர் அண்ணன் சிவாஜிலிங்கம். அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியத்தின் மீதான சமரசமற்ற பற்றுறுதியைக் கடைசி மூச்சு வரை கட்டிக்காத்த ஒரு உண்மையான தியாகியாகவே அவர் வாழ்ந்தார்.

எத்தனை சவாலான நெருக்கடிகள் சூழ்ந்தபோதும், தன் மீது ஆயுத முனையில் பலமுறை மிரட்டல்கள் எழுந்த நேரத்திலும், ஏனைய தரப்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சற்றும் பின்வாங்காது தமிழ்த் தேசியப் பரப்பில் நெஞ்சுரத்தோடு நின்றவர் சிவாஜிலிங்கம் அண்ணன். அச்சமற்ற துணிச்சல் மிக்க ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவும், சமரசமற்ற அரசியல் போராளியாகவும் மக்கள் மத்தியில் நின்று இறுதிவரை செயற்பட்ட அவரது ஆளுமை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

அரசியல் என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல, அது மக்களுக்காகக் களங்களில் நிற்பது என்பதை அவர் தனது செயற்பாடுகள் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

குறிப்பாக, 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின், தனது பதவிப் பிரமாணத்தை இனப்படுகொலையின் நேரடிச் சாட்சியமாக விளங்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொண்டமை, அவரது இனம் மீதான பற்றுறுதியின் பெருவடிவமாகத் திகழ்கின்றது. அந்த நிகழ்வு தமிழினத்தின் மீதும் அதன் வரலாற்றின் மீதும் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத ஈர்ப்பின் வெளிப்பாடாகும்.

வல்வெட்டித்துறை மண்ணின் பெருமையை மனதினில் ஏந்தி, தமிழர்களின் ஒப்பற்ற தலைமகனின் பெற்றோர்களான திருவேங்கடம் வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாள் ஆகியோரின் இறுதிக்கிரியைகளை, மிகச் சவால் மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் துணிச்சலுடனும் வீரியத்துடனும் ஒரு மகனைப் போல நின்று முன்னின்று நிறைவேற்றிய அவரது நெஞ்சுரத்தை இந்தத் தமிழினம் எக்காலமும் மறவாது.

நாடாளுமன்றத்திலும் சரி, பொதுவெளியிலும் சரி, தமிழர்களின் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு குரல் கொடுப்பதில் அவர் எப்போதுமே பின்நிற்கவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலத்தைச் சந்தித்துவிட்டு மீண்டெழும் ஈழத்தமிழினத்தின் விடுதலைப் பயணத்தில், அண்ணன் சிவாஜிலிங்கத்தின் இழப்பு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தேசியப் பற்றுடனும், தியாகத்துடனும் வாழ்ந்து மறைந்த அண்ணன் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரை ஆழமாக நேசித்த அனைத்துத் தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணிகளை விடுவிக்காமல் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குவது யாருக்காக? – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் அர்த்தபூர்வமானதாக இருக்க வேண்டுமாயின், மக்களை மீள்குடியேற்றுவதற்கு மானசீகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்…

95 0 0
இலங்கை செய்திகள்

தமிழ்த்தேசிய அடங்காப்பற்றாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் : சத்தியலிங்கம் எம்.பி இரங்கல்!

தமிழ்த்தேசிய அரசியலில் கொண்ட கொள்கையில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தனது இறுதி மூச்சுவரை தடம்மாறாது பயணித்த தமிழ்த்தேசிய பற்றாளன் அமரர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் என…

76 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் கீரி கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்ற கந்தசஷ்டி – சூரசம்ஹார பெருவிழா!

மன்னார் கீரி கடற்கரை பகுதியில் முருகப்பெருமானின் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரப் பெருவிழா இன்று (15) ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாகவும் வெகு விமரிசையாகவும் நடைபெற்றது. இன்று மாலை…

97 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி நடன பயிற்சி நிலையத்தின் சாதனைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி (Dazzling Diamonds Academy) நடன பயிற்சி நிலையத்தின் சாதனையாளர்களான நடன கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு…

87 0 0