சோனியா காந்தியின் சுயசரிதை நூலுக்கு அமோக வரவேற்பு!
சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘BELONGING: A JOURNEY OF LOVE’ புத்தகத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்தகக் கடைகளில் நூல்களை வாங்குவதற்காகக் கூட்டம் அலைமோதுவதாகவும், இந்தக் கூட்டத்தில் பெரும்பாலோர் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இதுவே மிகப்பெரிய புத்தக வெளியீடாக அமையும் என புத்தக வியாபார நிலைய உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


