மன்னார் கீரி கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்ற கந்தசஷ்டி – சூரசம்ஹார பெருவிழா!
மன்னார் கீரி கடற்கரை பகுதியில் முருகப்பெருமானின் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரப் பெருவிழா இன்று (15) ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாகவும் வெகு விமரிசையாகவும் நடைபெற்றது.
இன்று மாலை 4 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் முருகப்பெருமானின் சூரசம் ஹார நிகழ்வு, பாரம்பரிய கலை நிகழ்வுகள் மற்றும் பக்தி சார்ந்த நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றன.
குறிப்பாக, பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது டன், கண்கவர் வாண வேடிக்கைகளும் விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.
இந்நிகழ்வில் பெருமளவான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
ஆன்மீக மரபையும் தமிழர் பண்பாட்டு அடையாளங்களையும் பறைசாற்றும் வகையில் இவ்விழா சிறப்பாக நிறைவடைந்தது.
இதேவேளை குறித்த நிகழ்வு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்திலும் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.














