சண்டிலிப்பாயில் வீடுடைத்து நகை திருட்டு!
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை வீடுடைத்து நகை திருடப்பட்டதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வயோதிப பெண்ணொருவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 3 பவுண் நகை திருடப்பட்டுள்ளாதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரைணகளை மேற்கொண்டு வருகின்றனர்.


