உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
16 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மண்ணின் மைந்தனுக்கு நாளை இறுதி மரியாதை : வல்வெட்டித்துறையில் பூரண கடையடைப்புக்கு ஏற்பாடு

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
104 பார்வைகள்

சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று சனிக்கிழமை நள்ளிரவு காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்துக்கு (வயது 69) இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் தமிழர்கள் பெருந்திரளாக நாளை திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் திரளவுள்ளனர்.

மண்ணின் மைந்தனை வழியனுப்பி வைக்கும் இறுதி நாளில், வல்வெட்டித்துறை நகர் வர்த்தகர்கள் முழுமையாகக் கடைகளை அடைத்துத் தமது மரியாதையைச் செலுத்தவுள்ளனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அவர் வசித்த கல்றோட் வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறை இல்லத்தில் ஆரம்பமாகும்.

அதனைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு அன்னாரது பூதவுடல் வல்வெட்டித்துறைச் சந்தியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அங்கு தமிழ்த்தேசிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதன் பின்னர், இறுதிக்கிரியைகள் யாவும் நிறைவுபெற்று வல்வெட்டித்துறை – ஊறணி இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் இடம்பெறவுள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், பொது அமைப்புகள், தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்தேசியத் தலைவர்கள், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நெடியகாடு, வல்வெட்டித்துறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகழுடலுக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மண்ணின் மைந்தனான சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நடைபெறும் நாளைய தினம் வல்வெட்டித்துறை நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் அடைத்து மரியாதை செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணிகளை விடுவிக்காமல் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குவது யாருக்காக? – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் அர்த்தபூர்வமானதாக இருக்க வேண்டுமாயின், மக்களை மீள்குடியேற்றுவதற்கு மானசீகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்…

97 0 0
இலங்கை செய்திகள்

தமிழ்த்தேசிய அடங்காப்பற்றாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் : சத்தியலிங்கம் எம்.பி இரங்கல்!

தமிழ்த்தேசிய அரசியலில் கொண்ட கொள்கையில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தனது இறுதி மூச்சுவரை தடம்மாறாது பயணித்த தமிழ்த்தேசிய பற்றாளன் அமரர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் என…

77 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் கீரி கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்ற கந்தசஷ்டி – சூரசம்ஹார பெருவிழா!

மன்னார் கீரி கடற்கரை பகுதியில் முருகப்பெருமானின் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரப் பெருவிழா இன்று (15) ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாகவும் வெகு விமரிசையாகவும் நடைபெற்றது. இன்று மாலை…

99 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி நடன பயிற்சி நிலையத்தின் சாதனைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி (Dazzling Diamonds Academy) நடன பயிற்சி நிலையத்தின் சாதனையாளர்களான நடன கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு…

89 0 0