எச்சரிக்கை! : சுற்றுலா விசாவில் வேலை தேடி வெளிநாடு செல்ல வேண்டாம்!!
தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
மலேசியா, டுபாய், ஓமான் உள்ளிட்ட நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகப் பல்வேறு தரப்பினரால் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி, சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்லும் பல இலங்கையர்கள் தற்போது கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, வெளிநாடு செல்ல விரும்புவோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையாகப் பதிவு செய்துகொள்வதுடன், சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


