உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சவூதியில் உள்ள மக்கா பிராந்தியத்தை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
88 பார்வைகள்

சவூதி அரேபியாவுக்கும் யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமது வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்ட இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதறல்கள் புதன்கிழமை மக்கா பிராந்தியத்தில் விழுந்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் மக்கா பிராந்தியத்தை நோக்கி இந்த ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றை வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்த நிலையில், சபுஹா (Sabuhah) கிராமம் உள்ளிட்ட பல இடங்களில் அவற்றின் சிதறல்கள் விழுந்ததாகவும் சவூதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இஸ்லாத்தின் இரண்டு புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவைத் தாம் இலக்கு வைப்பதாக சவூதி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஹூதிக்கள் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.


சவூதி அரேபியாவின் ஏனைய பகுதிகளில் உள்ள இராணுவ மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளையே தமது இராணுவ நடவடிக்கைகள் குறிவைப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனினும், இந்த அண்மைய சம்பவம் குறித்து அவர்கள் இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.


“பொதுமக்களின் உடமைகளை இவ்வாறு விரோதப் போக்குடன் இலக்கு வைப்பது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்பதுடன், ஹூதி ஆயுதக்குழுவினர் பின்பற்றும் ஆபத்தான விரோதப் போக்கையும் இது பிரதிபலிக்கிறது” என சவூதி சிவில் பாதுகாப்புப் பிரிவு வியாழக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.


2014 ஆம் ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனின் தலைநகர் சனாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு ஆதரவாக சவூதி அரேபியா அடுத்த ஆண்டே இராணுவத் தலையீட்டை மேற்கொண்டது.


2022 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மோதலைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருந்தது. எனினும், இந்த ஆண்டின் முற்பகுதியில் மோதல்கள் மீண்டும் ஆரம்பமானதுடன், ஹூதிக்கள் சவூதி எல்லைக்குள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதும், ரியாத் யேமனில் வான்வழித் தாக்குதல்களை நடத்துவதும் தொடர்கிறது.


இந்த அண்மைய மோதல் தீவிரமடைந்துள்ளமையானது, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்கப் போவதில்லை!

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தினால் அதற்குரிய…

95 0 0
உலக செய்திகள்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயி@ரிழப்பு!

தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் உட்பட குறைந்தது ஆறு பேர்…

87 0 0
உலக செய்திகள்

சீன உளவுத்துறையுடன் தொடர்பா? – Nvidia CEO பதவிக்கு நெருக்கடி!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) பதவியிலிருந்து நீக்கப்படுவது குறித்து நிறுவனத்தின்…

90 0 0
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் – வலுவான நிலையில் இலங்கை அணி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான சதங்களின் உதவியுடன் இலங்கை அணி வலுவான…

87 0 0