உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எயார் இந்தியா விமானத்துக்கு கடத்தல் மிரட்டல்!

இந்திய செய்திகள் 8 மணி நேரம் முன்
94 பார்வைகள்

மும்பை நோக்கிச் செல்லவிருந்த எயார் இந்தியா விமானம் ஒன்றின் கழிவறையில், அந்த விமானத்தைக் கடத்துவதாக மிரட்டல் விடுத்த குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பு, அது கொல்கத்தா விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ள.

அந்த விமானம் இன்று (11) காலை 10.20 மணிக்கு புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

காலை 11.10 மணிக்கு விமானம் கடத்தப்படும் என்று அந்த குறிப்பில் எச்சரிக்கப்பட்டிருந்ததாக, கொல்கத்தா விமான நிலைய பணிப்பாளர் விக்ரம் சிங் தெரிவித்ததை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ள.

அந்தக் குறிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தில் ஏறியிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், பாதுகாப்புச் சோதனைகளுக்காக அந்த விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டது.

பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டன என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் முழுமையாகச் சோதிக்கப்பட்டு வருகிறது என்றும் சிங் தெரிவித்தார்.

விசாரணை குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திய இளம் மருத்துவர் லாவன்யா காலமானார்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் நரம்பியல் நிபுணர் மருத்துவர் லாவன்யா திடீரென காலமானார். இவரது மறைவு ஆந்திர மருத்துவத் துறையினர் மற்றும்…

88 0 0
இந்திய செய்திகள்

டெல்லியில் செயற்கை மழையை பொழிவிக்கத் திட்டம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும்…

94 0 0
இந்திய செய்திகள்

சபரிமலையில் நெய்க்கு தட்டுப்பாடு!

சபரிமலை ஐயப்பன் கோவில் பருவகாலம் நெருங்கும்நிலையில், நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிவதாக தெரிவிக்கப்படுகிறது. திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய கூட்டம் நேற்று நடந்த நிலையில், அதன் தலைவர்…

93 0 0
இந்திய செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி : தவெக எம்.எல்.ஏயை கைது செய்யுமாறு எடப்பாடி வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று…

92 0 0