கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திய இளம் மருத்துவர் லாவன்யா காலமானார்!
இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் நரம்பியல் நிபுணர் மருத்துவர் லாவன்யா திடீரென காலமானார்.
இவரது மறைவு ஆந்திர மருத்துவத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில், ‘மஸ்தீனியா கிராவிஸ்’ (Myasthenia Gravis) என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக இவர் தனது பேசும் திறனை இழந்தார்.
தீவிர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் இவருக்கு முழுமையான ஓய்வெடுக்க அறிவுறுத்திய போதிலும், நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து நான்கு மாதங்களுக்குள் மீண்டும் தனது பணிக்குத் திரும்பினார்.
குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பது, கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவது மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது என ஏழை எளிய மக்களுக்காகத் தனது சேவையைத் தொடர்ந்து வழங்கி வந்தார்.
இளம் வயதிலேயே அர்ப்பணிப்புடன் மருத்துவச் சேவையாற்றி வந்த மருத்துவர் லாவன்யாவின் மறைவு மருத்துவ உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என தெரிவிக்கப்படுகிறது.


