உடுவில் பகுதியில் வன்முறை குழு அட்டகாசம் – பிரதேச சபை உறுப்பினர் மீதும் தாக்குதல்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடுவில் பகுதியில் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
உடுவில் பகுதியில் உள்ள பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு அருகாமையில் வைத்து குறித்த குழு ஒருசிலர் மீது தாக்குதல் மேற்கொண்டவேளை பிரதேச சபையின் உறுப்பினர் வீட்டுக்கு வெளியே வந்துள்ளார்.
இதன்போது அந்த பிரதேச சபையின் உறுப்பினருடனும் முரண்பட்டு அவர்மீதும் அந்த குழு தாக்குதல் நடாத்தியது. இதன்போது சுன்னாகம் பொலிஸார் அந்த வீதியால் வந்தபோதும் அவர்கள் அதனை கட்டுப்படுத்த தவறினர்.
பின்னர் இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு தெரியப்படுத்தம் செய்ய நிலையில் பொலிஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இந்நிலையில் குறித்த குழுவானது தமது கார் உள்ளிட்ட வாகனங்களை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது. அத்ன்பின்னர்சுன்னாகம் பொலிஸார் அவற்றை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


