உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற பெண் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
79 பார்வைகள்

சட்டவிரோதமாக இரண்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இலங்கைப் பெண் பயணி ஒருவர், இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய தனியார் பாடசாலை ஆசிரியை எனத் தெரியவந்துள்ளது.

இவர் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை 12.00 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-309 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய பைகளில் 436 கிராம் எடையுள்ள 04 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் மற்றுமொரு தங்க பிஸ்கட்டின் ஒரு பகுதியையும் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த தங்க பிஸ்கட்டுகளும், அவற்றை சட்டவிரோதமாகக் கொண்டு வந்த பெண் பயணியும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு நடைபெற்ற விசாரணைகளின் பின்னர், அப்பெண்ணுக்கு 25 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

7 வீத பொருளாதார வளர்ச்சி இலக்குடன் நாடாளுமன்றில் பாதீடு சமர்ப்பிப்பு

2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து…

43 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட சமூகத்தின் நலன், விவசாய அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு.!

சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு – செலவுத் திட்டமாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ அநுரகுமார திசாநாயக்க அவர்களினால்…

73 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இயந்திர “பரசூட்” முறையிலான நாற்று நடுகை ஆரம்பம்.!

வடமாகாணத்தில் விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய நடவடிக்கைகளை உட்புகுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை வடமாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இயந்திர…

75 0 0
இலங்கை செய்திகள்

திசைகாட்டி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்திலாவது மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

இளைஞர், யுவதிகள் பல அப்பாவித்தனமான எதிர்பார்ப்புகளுடன் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த போதிலும், கடந்த இரண்டு வருடங்களில் அவை நிறைவேற்றப்படவில்லை எனவும், இம்முறை வரவு செலவுத்…

82 0 0