உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயி@ரிழப்பு!

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
88 பார்வைகள்

தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் உட்பட குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர் என்று காசாவின் சிவில் பாதுகாப்பு சேவையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதன்படி, கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிக்கான சிவில் பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் கூறினார்.

இறந்த அறுவை சிகிச்சை நிபுணர் ரெசிக் அபுஷிரா என மருத்துவப் பணியாளர்கள் அடையாளம் கண்டனர்.

மருத்துவமனைக்கு உள்ளிருந்து எடுக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் காணொளியில், அறைகள் முழுவதும் இடிபாடுகளும் தளபாடங்களும் சிதறிக் கிடப்பதும், சேதமடைந்த கூரைகளிலிருந்து கம்பிகள் தொங்குவதும் என விரிவான சேதம் காணப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்கப் போவதில்லை!

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தினால் அதற்குரிய…

97 0 0
உலக செய்திகள்

சவூதியில் உள்ள மக்கா பிராந்தியத்தை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

சவூதி அரேபியாவுக்கும் யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமது வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்ட இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளின்…

88 0 0
உலக செய்திகள்

சீன உளவுத்துறையுடன் தொடர்பா? – Nvidia CEO பதவிக்கு நெருக்கடி!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) பதவியிலிருந்து நீக்கப்படுவது குறித்து நிறுவனத்தின்…

92 0 0
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் – வலுவான நிலையில் இலங்கை அணி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான சதங்களின் உதவியுடன் இலங்கை அணி வலுவான…

87 0 0