உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் – வலுவான நிலையில் இலங்கை அணி!

உலக செய்திகள் 9 மணி நேரம் முன்
88 பார்வைகள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான சதங்களின் உதவியுடன் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 404 ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் பசிந்து சூரியபண்டார (0) மற்றும் தினேஷ் சந்திமால் (13) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த போதிலும், லஹிரு உதார (42) மற்றும் கமிந்து மெண்டிஸ் (58) ஆகியோர் அணியை மீட்கப் போராடினர்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொண்டு நிதானமாகவும் அதிரடியாகவும் ஓட்டங்களைக் குவித்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 167 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 117 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 200க்கும் அதிகமான ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியுள்ளனர்.

முன்னதாக தமது முதலாம் இனிங்ஸில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 434 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதற்கமைய இலங்கை அணி 30 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.

போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்கப் போவதில்லை!

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தினால் அதற்குரிய…

97 0 0
உலக செய்திகள்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயி@ரிழப்பு!

தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் உட்பட குறைந்தது ஆறு பேர்…

88 0 0
உலக செய்திகள்

சவூதியில் உள்ள மக்கா பிராந்தியத்தை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

சவூதி அரேபியாவுக்கும் யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமது வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்ட இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளின்…

89 0 0
உலக செய்திகள்

சீன உளவுத்துறையுடன் தொடர்பா? – Nvidia CEO பதவிக்கு நெருக்கடி!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) பதவியிலிருந்து நீக்கப்படுவது குறித்து நிறுவனத்தின்…

92 0 0