உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பவன் கல்யானின் 3 ஆவது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது!

சினிமா 15 மணி நேரம் முன்
79 பார்வைகள்

அன்னா கொனிடேலாவுடனான பிரிவின் மூலம் பவன் கல்யாணின் மூன்றாவது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.

நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்-அமைச்சருமான பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா கொனிடேலா ஆகியோர் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “எங்களது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை ஒன்றாகக் கழித்துள்ளோம். தற்போது பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையுடன் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.

எங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், நல்ல நண்பர்களாகவும், குழந்தைகளின் மீது அக்கறை கொண்ட பெற்றோர்களாகவும் தொடர்ந்து இருப்போம்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தைகளின் மகிழ்ச்சியும் நலனும் தங்களின் பொதுவான முன்னுரிமையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாற்றமான சூழலில் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும், புரிதலுடனும் அன்புடனும் அணுக வேண்டும் என்றும் இருவரும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை தங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

பவன் கல்யாணும், ரஷியாவைச் சேர்ந்த அன்னா லெஷ்னேவாவும் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘தீன் மார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அறிமுகமாகினர். இதையடுத்து, 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

பவன் கல்யாணுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது அன்னா கொனிடேலாவுடனான பிரிவின் மூலம் அவரது மூன்றாவது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

“ரணபாலி” படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு

1870-களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து, அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக ‘ரணபாலி’ படம் உருவாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான…

95 0 0
சினிமா

“நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!” – 12வது திருமண நாளில் மனைவிக்கு அட்லீ உருக்கமான வாழ்த்து

இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் 12-வது திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளார். இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் 12-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி,…

89 0 0
சினிமா

அவுஸ்ரேலிய அஞ்சல் முத்திரையில் ‘கூத்தாடி’ திரைப்படம் — நடிகர் ஷெல்வின் தாஸின் கலைப்பயணத்தில் வரலாற்றுச் சாதனை!

அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அஞ்சல் முத்திரையில், ‘கூத்தாடி’ (Koothadi) திரைப்படத்தின் பெயரும், அதன் தயாரிப்பாளரும் நடிகருமான ஷெல்வின் தாஸ் (Shelvin Das) அவர்களின் உருவமும் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன.…

82 0 0
சினிமா

‘தர்மன்’ படத்தில் இணைந்தார் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தர்மன்’ (Dharman) திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி (Ram Pothineni) இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

90 0 0