உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

“ரணபாலி” படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு

சினிமா 13 மணி நேரம் முன்
94 பார்வைகள்

1870-களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து, அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக ‘ரணபாலி’ படம் உருவாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ரணபாலி’. இப்படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜய்-அதுல் இசையமைத்துள்ளார்.

1876-ம் ஆண்டு முதல் 1878-ம் ஆண்டு வரையிலான பெரும் சென்னைப் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், காலனித்துவ அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் வீரனின் கதையையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இதில் விஜய் தேவரகொண்டா ரணபாலி என்ற வீரராகவும், ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ, ஆங்கிலேய அதிகாரி சர் தியோடர் ஹெக்டராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜய் – அதுல் இசையமைத்துள்ளனர்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற ‘ரணபாலி’ படம், ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘ரணபாலி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பவன் கல்யானின் 3 ஆவது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது!

அன்னா கொனிடேலாவுடனான பிரிவின் மூலம் பவன் கல்யாணின் மூன்றாவது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது. நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்-அமைச்சருமான பவன் கல்யாண் மற்றும் அவரது…

77 0 0
சினிமா

“நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!” – 12வது திருமண நாளில் மனைவிக்கு அட்லீ உருக்கமான வாழ்த்து

இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் 12-வது திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளார். இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் 12-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி,…

87 0 0
சினிமா

அவுஸ்ரேலிய அஞ்சல் முத்திரையில் ‘கூத்தாடி’ திரைப்படம் — நடிகர் ஷெல்வின் தாஸின் கலைப்பயணத்தில் வரலாற்றுச் சாதனை!

அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அஞ்சல் முத்திரையில், ‘கூத்தாடி’ (Koothadi) திரைப்படத்தின் பெயரும், அதன் தயாரிப்பாளரும் நடிகருமான ஷெல்வின் தாஸ் (Shelvin Das) அவர்களின் உருவமும் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன.…

82 0 0
சினிமா

‘தர்மன்’ படத்தில் இணைந்தார் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தர்மன்’ (Dharman) திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி (Ram Pothineni) இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

90 0 0