“நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!” – 12வது திருமண நாளில் மனைவிக்கு அட்லீ உருக்கமான வாழ்த்து
இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் 12-வது திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளார்.
இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் 12-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி, மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான சமூக வலைதளப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் வெளியிட்ட பதிவில்,
“சிறுவயது முதலே வாழ்க்கையில் எப்போதும் துணையாக நிற்கும் ஒரு உண்மையான நண்பர் இருந்தால் போதும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அழகான வாழ்க்கை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன். ஆனால், அதைவிடச் சிறந்த பரிசாக உன்னைக் கொடுத்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் துணையாக இருந்தாய். ஒரு சிறுவனை ஆணாகவும், ஓர் ஆணைச் சிறந்த மனிதராகவும் மாற்றினாய். என்னைக் கணவனாகவும், தந்தையாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல மனிதனாகவும் உருவாக்கினாய்.
உலகம் எனது வெற்றிகளைக் கொண்டாடலாம். ஆனால், இன்று நான் இருக்கும் நிலைக்குக் காரணம் உனது நிபந்தனையற்ற அன்பும், கருணையும், என் மீது நீ வைத்த நம்பிக்கையும்தான். 12 ஆண்டுகால அழகான திருமண வாழ்க்கை, கிட்டத்தட்ட 18 ஆண்டுகால நட்பு. என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை நீ என் அருகில் இருப்பதுதான். நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை. நீ இருந்தால் எனக்கு எல்லாமே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது சிறந்த தோழியாகவும், காதலாகவும், பலமாகவும் இருப்பதற்கு நன்றி தெரிவித்த அட்லீ, “எனது ஒவ்வொரு நாளையும் என்னுடன் இணைந்து தேர்ந்தெடுப்பதற்கு நன்றி. இனிய 12-வது திருமண நாள் வாழ்த்துகள் என் லட்டு, என் சுஜி. என்றென்றும் உன்னை நேசிப்பேன்” என்று அன்புடன் பதிவிட்டுள்ளார்.
அட்லீயின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ – பிரியா தம்பதிக்கு மீர் என்ற மகனும், மியூ என்ற மகளும் உள்ளனர்.


