சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில் 105 லீற்றர் (140 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய, மீதொட்டமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானத்துடன், சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


