உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள்; தேசிய மட்டத்தில் மன்னார் மாவட்ட செயலகம் இரண்டாம் இடம்.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
87 பார்வைகள்

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) மாலை நடைபெற்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் 2025/2026 வழங்கும் விழாவில், மன்னார் மாவட்ட செயலகம் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது.

உற்பத்தித் திறன் மேம்பாடு, நிறுவனச் சிறப்புத்துவம், நல்லாட்சி மற்றும் மக்களை மையப்படுத்திய அரச சேவை வழங்கல் ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய சிறந்த செயற்பாடுகளுக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் திரு. க.கனகேஸ்வரன் அவர்கள், மாவட்டச் செயலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து, மாவட்டச் செயலகத்தின் சார்பில் பெற்றுக்கொண்டார்.

தேசிய சாதனையானது, மக்களை மையப்படுத்திய அரச நிர்வாகத்தை வலுப்படுத்துதல், பொதுச் சேவைகளின் தரத்தை உயர்த்துதல், நிறுவன வினைத்திறனை மேம்படுத்துதல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், மக்களின் தேவைகளுக்கேற்ப விரைவாகச் செயல்படும் அரச சேவையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் மாவட்டச் செயலகம் கொண்டிருந்த தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.

குறிப்பாக, 5S வேலைத்தள முகாமைத்துவம், ISO 9001:2015 தர முகாமைத்துவ முறைமை, டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் மற்றும் தொடர்ச்சியான உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல் இத்தேசிய அங்கீகாரத்தைப் பெறுவதில் முக்கிய பங்காற்றியது.

மாவட்டச் செயலாளரின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ், மாவட்டச் செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, ஒற்றுமை, குழுச் செயல்பாடு மற்றும் பெறுமதிமிக்க பங்களிப்புகள் ஆகியவற்றின் விளைவாக இம்மகத்தான சாதனை சாத்தியமானது.

இத்தேசிய அங்கீகாரமானது, வினைத்திறன்மிக்க, புத்தாக்கம் நிறைந்த, மக்கள் நேயமிக்க மற்றும் சேவை நோக்குடைய அரச நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவதற்கான மன்னார் மாவட்டச் செயலகத்தின் தொடர்ச்சியான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், மன்னார் மாவட்டத்திற்கும் அதன் மக்களுக்கும் பெருமையையும் கௌரவத்தையும் பெற்றுத்தந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்க – ஆளுநர் பணிப்புரை!

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் சீர்செய்யுமாறும், நீண்டகால நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின்…

56 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளரிடம் 3 மணித்தியாலங்களிற்கும் அதிகமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமாரன்  மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் –…

65 0 0
இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

58 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

79 0 0