உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மொஹமட் ஷமி ஓய்வு!

விளையாட்டுச் செய்திகள் 11 மணி நேரம் முன்
85 பார்வைகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதான மொஹமட் ஷமி, கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

சரியாக 13 ஆண்டுகள் நிறைவடைந்த அதே நாளில் (6) சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷமி, “எனது வெள்ளை நிற சீருடையை கழற்றி வைக்கிறேன், ஆனால் அதனுடன் தொடர்புடைய நினைவுகள் எப்போதும் என் மனதை விட்டு அகலாது. இந்தியாவின் டெஸ்ட் சீருடையை முதன்முதலில் அணிந்த போது, நாட்டுக்காக ஏதேனும் ஒரு பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற ஒரே கனவுதான் என் மனதில் இருந்தது” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினாலும், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் உள்ளிட்ட வெள்ளைப் பந்து (White-ball) கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல் தொடர்களிலும் அவர் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு 627 கோடி நிதி இழப்பு?

இந்திய அணியுடனான போட்டித் தொடர்கள் எதுவும் திட்டமிடப்படாததால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு (ECB) 2027 ஆம் ஆண்டில் சுமார் 627 கோடி ரூபாய் நிதி…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் – இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (9) ஆரம்பமாகவுள்ளது. ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு; “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில்…

99 0 0
விளையாட்டுச் செய்திகள்

சாய்ந்தமருதில் LEADER ASHRAF TROPHY 2026 கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.!

சாய்ந்தமருது இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், அவர்களை விளையாட்டின் ஊடாக ஒன்றிணைத்து ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘LEADER ASHRAF TROPHY 2026’…

90 0 0