உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மூளையதிர்ச்சி காரணமாக தொடரிலிருந்து விலகிய டெவான் கான்வே!

விளையாட்டுச் செய்திகள் 4 மணி நேரம் முன்
81 பார்வைகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து அணிக்கு காயம் மற்றும் உடற்தகுதிப் பிரச்சனைகள் அடுத்தடுத்து பேரிடியாக அமைந்து வருகின்றன.

அந்த அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான டெவான் கான்வே, பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தால் மூளையதிர்ச்சி (Concussion) அடைந்து, இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.

ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஃபீல்டிங் பயிற்சியின் போது இந்த எதிர்பாராத விபத்து நடந்தது. பந்தை பிடிக்க முயன்றபோது, வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியும் டெவான் கான்வேயும் நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டனர்.

இதில் மேட் ஹென்றி காயமின்றி தப்பினார். ஆனால் கான்வேயின் தலையில் பலத்த அடிபட்டதால் அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது. வைத்தியப் பரிசோதனைக்குப் பிறகும் அவர் உடற்தகுதி பெறாததால், மீதமுள்ள 4 போட்டிகளிலிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

கான்வேயின் இந்தத் திடீர் விலகலைத் தொடர்ந்து, கடைசி 2 போட்டிகளுக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்த இடதுகை பேட்டர் நிக் கெல்லி உடனடியாக வெலிங்டனில் அணியுடன் இணையுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் கான்வே ஆடாததால் டிம் சீஃபர்ட் தொடக்க வீரராகக் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1 – 0 என முன்னிலை வகிக்கிறது.

ஏற்கனவே ரச்சின் ரவீந்திரா தோள்பட்டை காயத்தாலும், மார்க் சாப்மேன் தொடை தசைப்பிடிப்பாலும் ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறியிருந்தனர்.

அந்த வரிசையில் தற்போது முக்கிய வீரரான கான்வேயும் இணைந்திருப்பது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் அணி மட்டுமல்லாது நியூசிலாந்து ஏ அணியிலும் தொடர் காயங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தியா ஏ அணிக்கு எதிரான 3 ஆவது பயிற்சி டெஸ்டிலிருந்து சைமன் கீன், பென் லிஸ்டர் மற்றும் பிரேசர் ஷீட் ஆகிய மூவரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து வைத்தியசாலைக்குச் செல்வது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

அணி தலைவர் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலக வேண்டும்!

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறி பஞ்சாப்…

82 0 0
விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்குத் தடை!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் லின், கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கிறிஸ்…

88 0 0
விளையாட்டுச் செய்திகள்

U19 ஆசியக் கிண்ணத் தொடர் மலேசியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

ஓமானில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷின் அபார…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழன்.!

ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன்…

85 0 0