உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
6 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அணி தலைவர் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலக வேண்டும்!

விளையாட்டுச் செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்டியா தனது அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகி வீரராக மட்டும் விளையாட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பிய ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக அணி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும், அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகளும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இதனால் ஹர்திக் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து பேசிய அம்பதி ராயுடு, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்ற உணர்வில் இருந்திருக்கலாம். தொடர்ந்து விமர்சனங்களைச் சந்திப்பது ஒரு வீரரின் மனநிலையையும் அணிக்குள் அவரது செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே ஹர்திக் தொடர்ந்தால் அணி தலைவர் பொறுப்பை ஏற்காமல், தனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் . ஒருவேளை வேறு அணிக்கு மாறினாலும் குறைந்தபட்சம் ஒரு சீசனுக்கு அணி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்குத் தடை!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் லின், கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கிறிஸ்…

83 0 0
விளையாட்டுச் செய்திகள்

மூளையதிர்ச்சி காரணமாக தொடரிலிருந்து விலகிய டெவான் கான்வே!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து அணிக்கு காயம் மற்றும் உடற்தகுதிப் பிரச்சனைகள் அடுத்தடுத்து பேரிடியாக அமைந்து வருகின்றன. அந்த அணியின் நட்சத்திர தொடக்க…

76 0 0
விளையாட்டுச் செய்திகள்

U19 ஆசியக் கிண்ணத் தொடர் மலேசியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

ஓமானில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷின் அபார…

86 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழன்.!

ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன்…

84 0 0