உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
77 பார்வைகள்

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.

அந்த வகையில், பாடசாலை நடைபவனி, 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உத்தியோகபூர்வ நினைவு முத்திரை வெளியீடு, மரநடுகை விழா மற்றும் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இதன் ஒரு அங்கமாக, கடந்த நவம்பர் 05ஆம் திகதி, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துடன் இணைந்து Aventra Hospital ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

டாக்டர் அஹமட் ஷியாமின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இம்முகாமில் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை வழங்கினர்.

இம்மருத்துவக் குழுவில் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவிகளும் இடம்பெற்றிருந்தமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் நஸ்ரியா மூனாஸ், தற்போது பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் அஹமட் நூர்தீன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் இம்மருத்துவ முகாமை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

77 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

76 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

79 0 0
இலங்கை செய்திகள்

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி பாடசாலைகளை விடவும் வளங்குன்றிய நிலையில் உள்ளது.!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஆளணி மற்றும் பௌதிக வளப் பற்றாக்குறைகளுடன், பாடசாலைகளை விடவும் வளங்குன்றிய நிலையில் இயங்கிவருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

81 0 0