உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
86 பார்வைகள்

கொடவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட 5 சந்தேகநபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் சதுர திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, குறித்த விசாரணைகளை நிறைவு செய்து அது தொடர்பான கருத்துக்களை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்வதாகத் தெரிவித்தனர்.

மோட்டார் வாகனமொன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான குத்தகை தவணைப் பணத்தைச் செலுத்தியமைக்கான நிதி மூலங்களை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் அவருக்குச் சொந்தமான சொகுசு மோட்டார் வாகனமொன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரால் குறித்த மோட்டார் வாகனத்தின் குத்தகை தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

80 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

77 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

80 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

78 0 0