உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களை அச்சத்தில் ஆழ்த்தி ஆட்சி செய்ய நினைக்கும் அரசு : அதிகாரங்களை அள்ளி வழங்குவது மிகவும் ஆபத்தானது!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
88 பார்வைகள்

பொலிஸ் காவலில் இடம்பெறும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மோசமான பின்னணியில், பொலிஸாருக்கு வரையறையற்ற அதிக அதிகாரங்களை வழங்குவது மிக பாரதூரமானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

பொலிஸாரின் முழுமையான ஆதரவுடன் சர்வாதிகார அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே அரசு செயற்பட்டு வருகின்றது என்றும்,  பொலிஸாருக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டால் அது சமூகத்தில் பேரழிவையே ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

“நாட்டு மக்களின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை சுயாதீனத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கிலேயே ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலம்’ என்பன தயாரித்துச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முந்தைய அரசால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு, அன்றைய எதிர்க்கட்சியிலிருந்த மக்கள் விடுதலை முன்னணியும், தேசிய மக்கள் சக்தியும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.

அன்றைய காலகட்டத்தில் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்துக்கொண்டு தெருவில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டார். ஆனால், இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் கடந்தகால அரசுகளைப் போன்றே இவர்களும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.

சட்டத்தின் ஊடாக மக்களைத் தொடர்ச்சியாக அச்சமடையச் செய்து, அதன்மூலம் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவே அரசு இவ்வாறான ஜனநாயக விரோதச் சட்டமூலங்களைக் கொண்டுவந்துள்ளது.

குறிப்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலத்தின் ஊடாகப் பொலிஸாருக்கு வரையறையற்ற அதிகாரங்கள் அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் காவலில் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆபத்தான பின்னணியில், பொலிஸாருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது மிகவும் ஆபத்தானது. இத்தகைய வரம்பற்ற அதிகாரங்கள் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

80 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

77 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

80 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

78 0 0