உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
6 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தைரியமிருந்தால் உடனே தேர்தலை நடத்திக் காட்டுக! : அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்

89 பார்வைகள்

அரசும் ஜனாதிபதியும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களைத் தொடர்ந்தும் கற்பனை உலகில் வாழ வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கடுமையாகச் சாடியுள்ளார்.

அரசு அதிகாரத்துக்கு வரும்போது நாட்டு மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், இன்று செல்லும் இடங்களிலெல்லாம் ஜனாதிபதி புதிய கதைகளைக் கூறி மக்களை மேலும் ஏமாற்றி வருகின்றார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“வரிகள் உயர்த்தப்படவில்லை என ஜனாதிபதி கூறினாலும், இன்று அத்தியாவசியப் பொருள்கள், கல்வி மற்றும் சுகாதார உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களைக் கண்டு அரசு காதுகேளாத யானையைப் போலச் செயல்படுகின்றது.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறியவர்கள், இந்த ஆண்டில் மட்டும் கட்டணத்தை இருமுறை உயர்த்தியுள்ளதுடன், மீண்டும் 2.8 மடங்கினால் உயர்த்த முன்மொழிந்துள்ளனர்.

எதிர்த்தரப்பினர் தாக்கும் அளவை வைத்தே தங்கள் வெற்றியை அளவிட முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகின்றார். அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அடைந்த வெற்றியைப் பாடமாகக் கொண்டு, அரசுக்குத் தைரியமிருந்தால் உடனடியாகத் தேர்தலை நடத்திக் காட்டட்டும். மக்கள் எவ்வளவு சௌகரியமாக இருக்கிறார்கள் என்பதைத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்.

அரசுக்கு எதிராக உருவெடுத்து வரும் மக்கள் எழுச்சியை அடக்குவதற்காகவே ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ ஆகியவற்றைக் கொண்டுவந்து ஜனநாயகத்தைக் குழப்ப முயற்சிக்கின்றனர்.

இந்தப் புதிய சட்டங்களின் கீழ், உரிமைகளுக்காகப் போராடுபவர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரையிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் நிதியிலிருந்து பெருந்தொகைப் பணம் அரசினதும் ஜனாதிபதியினதும் பிம்பத்தைக் கட்டியெழுப்பத் தனிப்பட்ட ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்களின் திறமையின்மையை மூடிமறைக்கவே அரசு இந்த அடக்குமுறைகளைக் கையிலெடுக்கின்றது. ஆட்சியை நடத்த முடியாவிட்டால், அதைத் தகுதியானவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

74 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

72 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

75 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

72 0 0