உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

உலக செய்திகள் 13 மணி நேரம் முன்
89 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், கலிபோர்னியா மாநிலத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளால் அளிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் ஆயிரக்கணக்கான வாக்குகளைத் தடுத்து நிறுத்துமாறு விடுத்த கோரிக்கையை அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

நீதித்துறை முன்வைத்த இந்த அவசரக் கோரிக்கை, தாக்கல் செய்யப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே நேற்று (02) நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கை விசாரித்த அனைத்து நீதிமன்றங்களும் இதுவரை குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில், போதிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த மனு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

எனினும், இந்தத் தீர்ப்புக்கான காரணங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை. 

அதேவேளை, தீர்ப்புக்கு எதிராக எந்தவொரு நீதிபதியும் கருத்து வெளியிடவில்லை. இதற்கிடையில், அமெரிக்கா முழுவதும் பல கோடி வாக்காளர்கள் ஏற்கனவே முன்கூட்டிய வாக்களிப்பில் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7%க்கும் அதிகமான அளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, பிரெண்ட் (Brent)…

77 0 0
உலக செய்திகள்

ஈரானுடன் சமாதான உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பு – ட்ரம்ப் நம்பிக்கை!

கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடன் மூன்று நாட்களாக இரகசியப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…

94 0 0
உலக செய்திகள்

புளோரிடாவில் வணிகப் பயன்பாட்டு வானூர்தி விபத்து: 9 பேர் பரிதாபமாக ப@லி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வணிகப் பயன்பாட்டு ஜெட் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

93 0 0
உலக செய்திகள்

இஸ்ரேலில் நெதன்யாகுவை வெளியேற்றும் போராட்டங்கள் தீவிரம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அந்த நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள்…

100 0 0