ரம்புக்கனை நோக்கிச் சென்ற தொடருந்தின் மீது மரம் வீழ்ந்து விபத்து!
கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாகப் பிரதான பாதையின் ரயில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 05.10 மணிக்குச் பயணத்தைத் தொடங்கிய ரயில் மீதே இவ்வாறு மரம் விழுந்துள்ளது.


