ஈரானுடன் சமாதான உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பு – ட்ரம்ப் நம்பிக்கை!
கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடன் மூன்று நாட்களாக இரகசியப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஈரானுடன் சமாதான உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் விரைவில் ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் எனவும் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும் ஈரானுடன் உடன்படிக்கையொன்றை எட்டுவதில் தாமும் ஜனாதிபதி ட்ரம்பும் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரையான பேச்சுவார்த்தைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்டமாக மேலும் முன்னேற்றங்களை எட்ட முடியுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை இறுதி உடன்படிக்கை எட்டப்படவில்லை.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


