உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
3 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

களுத்துறை சிறையில் தற்கொ@லைக்கு முயன்ற கைதி சிகிச்சை பலனின்றி உயி@ரிழப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
86 பார்வைகள்

களுத்துறை சிறைச்சாலையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற கைதியொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மொணராகலை, வெலியாய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் ஒக்டோபர் 31 ஆம் திகதி இவர் களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

உயிரிழந்த கைதி சிறைச்சாலையின் கழிப்பறைய ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்ற போது, ஏனைய கைதிகள் சிலர் அதனைக் கண்டு அவரைக் காப்பாற்றியுள்ளனர். அதன் பின்னர் குறித்த கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நண்பர்களுடன் வெளியில் சென்ற குடும்பஸ்தர் குளத்தில் சட@லமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், நண்பர்களுடன் வெளியில் சென்ற நிலையில் இன்று (02) குளமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள குளமொன்றில் சடலம் ஒன்று…

79 0 0
இலங்கை செய்திகள்

மெல்போர்னிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் வானூர்தி அவசரத் தரையிறக்கம் – விசேட விசாரணை ஆரம்பம்!

மெல்போர்னில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்குச் சொந்தமான UL605 வானூர்தியின் சரக்குப் பெட்டகத்தில் புகை எச்சரிக்கை சமிக்ஞை செயல்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசேட…

83 0 0
இலங்கை செய்திகள்

‘தூதர்களுடன் ஒரு மாலை’ நிகழ்வு மத்திய மாகாண சபை அரங்கில் இடம்பெற்றது

மத்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பிற்கு மக்களின் குறைகளை அறிந்து செயல்படக்கூடிய அரசாங்க அதிபர் தேவை! : சிறிநேசன் எம்.பி வலியுறுத்தல்

மக்களின் குறைகளை அறிந்து செயல்படக்கூடிய ஒரு பொருத்தமான அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவை.   ஒருபக்கச்சார்பாக குறிப்பிட்ட தரப்பினருக்கு மாத்திரம் அவர் ஆதரவாக இருப்பது என்பது…

90 0 0