உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தமிழன் நானே! : இராமநாதன் அர்ஜுனா பெருமிதம்!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
102 பார்வைகள்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு முதன்முதலாக முஸ்லிம் மக்களுடைய பிரச்சனை தொடர்பாக நடக்கின்ற அநியாயங்கள் தொடர்பாக முதன்முதலாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் முஸ்லிம் மக்களுக்காக ஒரு தமிழன் என்ற அடிப்படையில் இதுவரைக்கும் குரல் கொடுத்திருக்கின்றேன் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் நீதிமன்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நான் உட்பட ஆறு முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக இடைக்காலக் கட்டளையின் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்கு எங்களுக்கு அழைப்பாணை வந்திருந்தது.   என்னுடைய சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரநாதன் அவர்கள் இன்றைய தினம் தோன்றி இருந்தார்கள்.

இதிலே எங்களுக்கு மேலே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குரிய காரணம் காட்டுவதற்காக 11-ஆம் மாதம் 16-ஆம் தேதி வழக்கு திகதியிடப்பட்டிருக்கின்றது.அதைவிட இதான் என்று நினைக்கின்றேன். மட்டக்களப்பில் நான் வர வேண்டிய இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

“அந்த வழக்கினுடைய மனுவை நான் சரியா வாசிக்கல. ஆனால் வழக்கு போடப்பட்டிருக்கக்கூடிய அடிப்படை நோக்கம், நான் மத ரீதியாக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றேன் என்றுதான் போடப்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு முதன்முதலாக முஸ்லிம் மக்களுடைய பிரச்சனை தொடர்பாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து, புத்தளம் ஆதார வைத்தியசாலையிலிருந்து, கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடக்கின்ற அநியாயங்கள் தொடர்பாக முதன்முதலாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் முஸ்லிம் மக்களுக்காக ஒரு தமிழன் என்ற அடிப்படையில் இதுவரைக்கும் குரல் கொடுத்திருக்கின்றேன்.  

யாழ்ப்பாணத்தில் என்னுடைய வாக்குகளில் முஸ்லிம் வாக்குகளும் இருக்கிறது. என்னுடைய இனவாதம், மதவாதம் என்கிறதைக் கடந்துதான் நான் என்னுடைய அரசியலைச் செய்கின்றேன்.

ஆனால் இந்த வழக்கில் நான் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே இன ரீதியான பிறழ்வுகளை ஏற்படுத்துகின்றேன் என்றுதான் வழக்கு போடப்பட்டிருக்கின்றது. ஆனால் நான்… என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை, ஒரு இனத்தினுடைய அடையாளம் ஒன்றை நாங்கள் அகற்றுவதற்கு சட்டங்களைப் பயன்படுத்துவதாக இருந்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படை உரிமைகளை மீறும்.  

உதாரணத்திற்கு, நான் என்னுடைய இந்துவாக இருந்து கையில் நூல் கட்டியிருந்தால், அந்த நூல் கட்ட முடியாது என்று சொல்லி அரசாங்கம் சொல்வதாக இருந்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகின்றது.  

முஸ்லிம் மக்களுடைய ஹிஜாப் என்பது வந்து அவர்களுடைய உணர்வோடு ஒன்றின மதஞ்சார்ந்த ஒரு விடயம். அந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு வெளியிலும், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் முதல் தடவையாக நான் கதைத்த பிறகுதான் இந்த பிரச்சனை பெரிதாக மாறியது.   இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கொழும்பு அதற்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கல்முனை வைத்தியசாலையிலே நடந்தது அந்த ஆறு பெண்களுக்கு நடந்த அநியாயம் என்பது தொடர்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.   கௌரவ நீதிமன்றத்தில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. நீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்புகளை மிக நேர்த்தியாகத் தரும் என்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இலங்கையிலே இருக்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நண்பர்களுடன் வெளியில் சென்ற குடும்பஸ்தர் குளத்தில் சட@லமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், நண்பர்களுடன் வெளியில் சென்ற நிலையில் இன்று (02) குளமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள குளமொன்றில் சடலம் ஒன்று…

66 0 0
இலங்கை செய்திகள்

களுத்துறை சிறையில் தற்கொ@லைக்கு முயன்ற கைதி சிகிச்சை பலனின்றி உயி@ரிழப்பு!

களுத்துறை சிறைச்சாலையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற கைதியொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் மொணராகலை, வெலியாய பகுதியைச் சேர்ந்த…

73 0 0
இலங்கை செய்திகள்

மெல்போர்னிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் வானூர்தி அவசரத் தரையிறக்கம் – விசேட விசாரணை ஆரம்பம்!

மெல்போர்னில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்குச் சொந்தமான UL605 வானூர்தியின் சரக்குப் பெட்டகத்தில் புகை எச்சரிக்கை சமிக்ஞை செயல்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசேட…

76 0 0
இலங்கை செய்திகள்

‘தூதர்களுடன் ஒரு மாலை’ நிகழ்வு மத்திய மாகாண சபை அரங்கில் இடம்பெற்றது

மத்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும், மாகாணத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும்…

79 0 0