உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய இரு சட்டங்கள் மூலம் மக்கள் மீது திட்டமிட்டு அரச பயங்கரவாதம் திணிப்பு!: சஜித் குற்றச்சாட்டு

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
70 பார்வைகள்

நாட்டில் இரு புதிய சட்டமூலங்களைக் கொண்டுவந்து, அரசு சட்டபூர்வமான முறையில் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் திணிக்க முயல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பொலன்னறுவை மாவட்டம், கல்லெல குசும்மகம ஸ்ரீ சுபோதிராஜாராம விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காகச் சீமெந்து மூட்டைகளை வழங்கி வைக்கும் புண்ணிய நிகழ்வில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க வேலைத்திட்டத்தில் பங்கேற்பதற்காக பொலன்னறுவை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

அரசின் புதிய சட்ட மூலங்கள் குறித்து சஜித் பிரேமதாஸ மேலும் சுட்டிக்காட்டுகையில்,

“ஒவ்வொரு குடிமகனுக்கும் மதச் சுதந்திரம், சித்தாந்த சுதந்திரம், அரசியல் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்துடன் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் அடிப்படை உரிமைகள் காணப்படுகின்றன. ஆனால், அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டமூலங்கள் மக்களின் இந்தச் சுதந்திரத்தைப் பறிக்கின்றன.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இரு சட்டங்கள் மூலம் நீதிமன்ற அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பயங்கரவாதி யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் அணியும் ஆடை, சிகை அலங்காரம், பச்சைக்குத்துதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு எவரையும் பயங்கரவாதியாகவும், குற்றவாளியாகவும் முத்திரை குத்தும் அதிகாரத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இது 220 இலட்சம் மக்கள் மீது சட்டபூர்வமாக அரச பயங்கரவாதத்தைத் திணிப்பதாகும்.” – என்றார்.

அரசின் அரசியல் உள்நோக்கம் குறித்து அவர் பேசுகையில்,

“பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட சட்டங்களே அவசியமாகும். ஆனால் தற்போதைய அரசு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவற்றை மீறித் தனி கட்சி ஆட்சியை ஸ்தாபித்து ஜனநாயகத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

புத்த சாசனத்துக்கு அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள விசேட அந்தஸ்தைப் போன்று ஏனைய மதங்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ புத்த சாசன அமைச்சை உருவாக்கியதுடன் ஏனைய மதங்களுக்கும் இராஜாங்க அமைச்சுகளை அமைத்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அவற்றை திணைக்களங்களாகச் சுருக்கியதுடன், பிக்குகளின் காவி உடையிலும் கை வைக்கும் அளவிற்குச் சென்றுள்ளனர்.

வெறும் கோஷமிடும் ‘காட்போர்ட் பௌத்தர்களைப்’ போல் நாங்கள் மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. இனவாதம் மற்றும் மதவாதத்தை நிராகரித்து முற்போக்குத் தேசியவாதத்தையே நாம் முன்னெடுக்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காட்டு யானை தாக்கி 76 வயது முதியவர் பரிதாபமாக உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஹேனா பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இன்று(1)  காலை  இடம்பெற்ற…

71 0 0
இலங்கை செய்திகள்

ரணில் – சஜித் கை கோர்த்தாலும் எமது அரசை அசைக்க முடியாது! – அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஒன்றாகக் கைகோர்த்தாலும் எமது தேசிய மக்கள் சக்தி அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர்…

82 0 0
இலங்கை செய்திகள்

சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி வலி. வடக்கில் மக்கள் வீதிப்போராட்டம்!

முப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகியவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப்…

79 0 0
இலங்கை செய்திகள்

கனகபுரம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் இன்று ஆரம்பம் : சிறீதரன் எம்.பியும் பங்கேற்பு

தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஆரம்ப நாள் நிகழ்வும், அது தொடர்பான விசேட கலந்துரையாடலும் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை…

80 0 0