உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப்; யாழ். வீராங்கனை சிறந்த ‘ரைடர்’ விருது வென்று சாதனை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
89 பார்வைகள்

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை தேசிய அணி சார்பாக பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை விமலேந்திரன் டிலக்சனா சிறந்த ‘ரைடர்’ விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தத் தொடரில் இலங்கை மகளிர் அணி பங்கேற்ற லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு அபார வெற்றியீட்டியிருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 31–20 என்ற புள்ளிகள் கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்குக் களத்தில் மிகச் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்திய யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியைச் சேர்ந்த விமலேந்திரன் டிலக்சனா போட்டியின் சிறந்த ‘ரைடர்’ விருதைத் தனதாக்கிக் கொண்டார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அளவில் வட பிராந்திய வீராங்கனை ஒருவர் இத்தகைய சாதனையைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறுபான்மைச் சமூகங்கள் கல்வி மூலம் ஆளுமையை மேம்படுத்த வேண்டும்.!

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பதால் எதிர்கொள்ளும் சவால்களை ஈடுசெய்ய, கல்வியின் ஊடாகவே தமது ஆளுமையையும் திறமைகளையும் வெளிப்படுத்த…

53 0 0
இலங்கை செய்திகள்

நிர்வாகச் செயற்பாடுகளை துரிதப்படுத்துங்கள்.!

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அமைச்சுக்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை மீறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மோசமான அம்சங்களைக் கொண்ட அடக்குமுறைச் சட்டங்களையே…

64 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டங்களால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயம்.!

அரசால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்’ காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு…

80 0 0