உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸ் காவல் மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
65 பார்வைகள்

“நீதிமன்றங்களில் சட்டரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பொலிஸ் நிலையங்களிலும் சிறைச்சாலைகளுக்குள்ளும் தீர்க்கப்படும் அச்சுறுத்தலான நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது. பொலிஸ் காவலில் பதிவாகும் மரணங்கள் தொடர்பில் அநுர அரசு தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கண்டனக் கருத்துகளை முன்வைத்தார்.

ஹோமாகம பொலிஸ் நிலைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் குறித்துச் சுட்டிக்காட்டி உரையாற்றிய அவர்,

“ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் சர்ச்சையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இந்நபரின் மரணத்துக்கு உடல்நலக்குறைவே காரணம் என அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டது. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதல்களால் நரம்புகளும் எலும்புகளும் கடுமையாகச் சேதமடைந்தமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு சந்தேகத்துக்கிடமான மரணச் சம்பவம் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிலும் பதிவாகியுள்ளது.” – என்றார்.

நாட்டில் தற்போது சிவில் உரிமைகளை முடக்கும் அடக்குமுறை ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று குற்றம்சாட்டிய அவர்,

“கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ‘பொலிஸ் காவலில் உள்ள நபர் ஒருவர் உயிரிழந்தால் அதற்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

அவர் ஆட்சிப்பீடமேறி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஹோமாகம மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் காவல் மரணங்கள் தொடர்பில் அவரின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மேடைகளில் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறுபான்மைச் சமூகங்கள் கல்வி மூலம் ஆளுமையை மேம்படுத்த வேண்டும்.!

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பதால் எதிர்கொள்ளும் சவால்களை ஈடுசெய்ய, கல்வியின் ஊடாகவே தமது ஆளுமையையும் திறமைகளையும் வெளிப்படுத்த…

53 0 0
இலங்கை செய்திகள்

நிர்வாகச் செயற்பாடுகளை துரிதப்படுத்துங்கள்.!

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அமைச்சுக்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை மீறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மோசமான அம்சங்களைக் கொண்ட அடக்குமுறைச் சட்டங்களையே…

64 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டங்களால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயம்.!

அரசால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்’ காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு…

80 0 0