உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
84 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், இனிவரும் காலங்களிலும் தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ ஜனநாயகத்துக்கு விரோதமானதாக அமையாது என்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயற்படப்போவதில்லை. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு சட்டத்தையும் நாங்கள் இயற்றப் போவதும் இல்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படவில்லை. இனிவரும் காலங்களிலும் அவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது.” – என்றார்.

கடந்தகால அரசுகளின் செயற்பாடுகள் குறித்து விமர்சித்த அவர்,
“கடந்தகால அரசுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தமது அரசியல் பழிவாங்கல்களுக்காகவே பயன்படுத்தின. குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகப் பல அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், தற்போதைய ஆட்சியில் அவ்வாறான சூழல் முற்றாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படும்போதே, அவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. பாதாள உலகக் குற்றங்களையும் போதைப்பொருள் கடத்தலையும் முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமாயின், அதற்கெனப் பிரத்தியேகமான வலுவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

அதற்கமைவாகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறுபான்மைச் சமூகங்கள் கல்வி மூலம் ஆளுமையை மேம்படுத்த வேண்டும்.!

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பதால் எதிர்கொள்ளும் சவால்களை ஈடுசெய்ய, கல்வியின் ஊடாகவே தமது ஆளுமையையும் திறமைகளையும் வெளிப்படுத்த…

53 0 0
இலங்கை செய்திகள்

நிர்வாகச் செயற்பாடுகளை துரிதப்படுத்துங்கள்.!

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அமைச்சுக்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை மீறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மோசமான அம்சங்களைக் கொண்ட அடக்குமுறைச் சட்டங்களையே…

64 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டங்களால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயம்.!

அரசால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்’ காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு…

80 0 0