உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸ் காவலில் இருந்த மற்றொரு சந்தேகநபரும் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
83 பார்வைகள்

கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸ் காவலில் இருந்த அச்சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (25) நண்பகல் வேளையில் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட குறித்த சந்தேகநபர் கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக அவர் பொலிஸ் காவலில் இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், நேற்று முன்தினம் (27) இரவு அவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபரின் மரணத்தைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள் ஐவரை கொபெய்கனே பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸாருக்கு அறிவித்து, எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகவே பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகக் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், பிரதேசவாசிகளால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அவர் உயிரிழப்பதற்கு முன்பே வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு முன்னரும் உயிரிழந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட திருட்டுகள் குறித்து பலமுறை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதாகவும், அப்போது அவரைப் பிடித்துத் தன்னிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரே அறிவுறுத்தியதாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை – நெதர்லாந்து இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு.!

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK)…

63 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார்.!

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

74 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள்.!

நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும்…

68 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா.!

எத்தனை சவால்கள் மற்றும் பொருளாதாரக் கஷ்டங்கள் நிலவினாலும், நமது கலாச்சாரத்தையும் கலைகளையும் பேணிப் பாதுகாத்து வரும் கலைஞர்களும் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண…

59 0 0