உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீண்டும் டொரன்டோ நகர முதல்வரானார் ஒலிவியா சௌ

உலக செய்திகள் 1 நாள் முன்
97 பார்வைகள்

கனடாவின் டொரண்டோ நகரின் முதல்வருக்கான தேர்தலில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், ஒலிவியா சௌ தனது முதன்மைப் போட்டியாளரான நகர சபை உறுப்பினர் பிராட் பிராட்போர்டை வீழ்த்தி, மீண்டும் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எளிய மற்றும் நடுத்தர மக்களின் “வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்தல்” என்ற விஞ்ஞாபனத்தை முதன்மையாகக் கொண்டு இவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஒலிவியா சௌ 54.2% அடிப்படையில் தோராயமாக 5,32,201 வாக்குகளும் பிராட் பிராட்போர்ட் 41.1% அடிப்படையில் தோராயமாக 4,04,013 வாக்குகளும் பெற்றனர்.

இதனடிப்படையில், 1,28,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஒலிவியா சௌ மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றிக்கொண்டாடத்தின் பின், ஒலிவியா சௌ கருத்து தெரிவிக்கையில்,

“டொராண்டோ மக்கள் தங்கள் முடிவை அறிவித்துவிட்டார்கள். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள், வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்கள் என டொராண்டோவைத் தங்கள் இல்லமாகக் கொண்டு உழைக்கும் ஒவ்வொருவருக்கும் நான் கூறுகிறேன். நானும் உங்களுக்கான முதல்வர் தான்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தோல்வியை ஒப்புக் கொண்ட பிராட் பிராட்போர்ட், ஒலிவியா சௌவுக்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்ததுடன், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! ஆட்சியைத் தக்கவைக்கிறாரா நெதன்யாகு?

இஸ்ரேல் தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் தெளிவான வெற்றி கிடைக்காத நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து இடைக்காலப் பிரதமராகச் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெதன்யாகு…

85 0 0
உலக செய்திகள்

ஏமனில் சவுதி வான்வழித் தாக்குதல் : குழந்தைகள் உட்பட 14 பேர் உயி@ரிழப்பு!

ஹவுதி கட்டுப்பாடில் உள்ள ஏமன் பகுதியில் சவுதி அரேபிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஆளுகையில்…

95 0 0
உலக செய்திகள்

ஸ்பெயினில் அதிவேக தொடருந்து விபத்து : 64 பேர் ப@லி!

மத்திய ஸ்பெயினில் நேற்றைய தினம் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றின் பின்பகுதியில் அதிவேக ரயில் ஒன்று மோதியதில் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64…

89 0 0
உலக செய்திகள்

விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயரிய விருது!

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி ஃப்ளைதுபாய் (flydubai) விமானத்தின் விமானிகள் அறை (Cockpit) பகுதியில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையின்போது, படுகாயமடைந்த நிலையிலும் சாதுரியமாகச் செயற்பட்டுப் பெரும்…

92 0 0