உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் கடற்றொழில் திணைக்களத்தை திட்டமிட்டு சிங்களமயமாக்க முயற்சியா?

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
86 பார்வைகள்

மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை திட்டமிட்டு முழுமையாக சிங்களமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கடற்றொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களைச் சிங்கள உத்தியோகத்தர்கள் மூலம் நிரப்பும் நடவடிக்கை தற்போதைய ஆட்சிக்காலத்தில் உச்சம்பெற்றுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அதிகாரிகளோ இது குறித்துக் குரல் எழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வடக்கு மாகாணத்திலேயே அதிகம் சிங்களமயமாக்கப்படும் முதலாவது அலுவலகமாக மன்னார் கடற்றொழில் அலுவலகம் திகழ்கின்றது. அங்கு அனைத்துத் தரங்களிலுமாக 8 உத்தியோகத்தர்கள் மட்டுமே பணியில் இருந்த நிலையில், புதிதாக 10 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஆவர். இதன் மூலம் அலுவலகத்தில் தமிழ் உத்தியோகத்தர்கள் 10 பேராகவும், சிங்கள உத்தியோகத்தர்கள் 8 பேராகவும் மாறியது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, பணியிலிருந்த 10 தமிழ் உத்தியோகத்தர்களில் 4 பேருக்கு நேற்று திடீரென கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மன்னார் மீன்பிடி அலுவலகத்தில் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளதுடன், சிங்கள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மன்னார் கடற்றொழில் திணைக்களம் விரைவில் முழுமையாகச் சிங்களமயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பிராந்திய மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற கடல் அட்டை ஏலத்தின்போது, உதவிப் பணிப்பாளருடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்ற காரணத்தினாலேயே இந்த 4 தமிழ் உத்தியோகத்தர்களுக்கும் பழிவாங்கும் நோக்கில் கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. இதனால் இதுவொரு திட்டமிட்ட நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்ட தமிழ் உத்தியோகத்தர்களில் ஒருவர் 58 வயதுடையவர் என்பதைக் கூட நிர்வாகம் கருத்தில் கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும், எஞ்சியுள்ள 6 தமிழ் உத்தியோகத்தர்களில் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் வருடாந்த இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டமானது கடற்றொழிலில் அதிக நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் கொண்ட ஒரு பிராந்தியமாக உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாற்றங்கள் எதிர்காலப் பாரிய திட்டத்தின் முன்னோடியோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களிலும் ஏற்கனவே இரு சிங்கள ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது தலா 4 புதிய சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் பெருமளவான போ@தை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!

யாழில் இன்றையதினம் (27) பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்டம் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் –…

55 0 0
இலங்கை செய்திகள்

19 ஆவது உலக தொழிற்சங்க சம்மேளனம் இலங்கையில்!

19ஆவது உலக தொழிற்சங்க சம்மேளன மாநாட்டை 2027ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

58 0 0
இலங்கை செய்திகள்

நவம்பர் 3 இல் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது விவாதம்!

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டதாகக் கூறி சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.…

71 0 0
இலங்கை செய்திகள்

சுழன்றடிக்கும் ‘அர்னாப்’ புயல்; இந்திய கடற்பரப்பில் தஞ்சமடைய இலங்கை படகுகளுக்கு அனுமதி.!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயலினால் ஏற்பட்டுள்ள அபாயகரமான காலநிலைச் சூழலில், இந்தியக் கடற்பரப்பில் பாதுகாப்பாகத் தஞ்சமடைவதற்குச் சுமார் 25 இலங்கை பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதி…

86 0 0