உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருக்கோவிலில் கிணற்றில் இருந்து T-56 தோட்டாக்கூடுகள் மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு!

86 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, T-56 ரக தோட்டாக்கூடுகள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற திருக்கோவில் பொலிஸார், குறித்த கிணற்றிலிருந்து ஆயுதங்களையும் அவற்றின் பாகங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட ஆயுதப் பொருட்களின் விபரம்:

T-56 ரகத் தோட்டாக்கூடுகள் (Magazines) – 09

போல்ட்கள் (Bolts) மற்றும் ஏனைய பாகங்களுடன் கூடிய T-56 துப்பாக்கிப் பாகங்கள் – 03

இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் / தோட்டாக்கூடுகள் – 06

உயர் பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் விசாரணை

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை – மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் நேரடி வழிகாட்டலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தந்தராயணவின் மேற்பார்வையில், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலிந்த பீரிஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நியூசிலாந்து, அவுஸ்திரேலிய தூதுவர்கள் பலாலி விமான நிலையத்திற்கு சென்று ஆய்வு.!

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ள நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளின் தூதுவர்கள், இன்று பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நேரில்…

48 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் சிக்கிய நபர்.!

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவர வாவி அணைக்கட்டு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மாலை அநுராதபுரம் குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை…

74 0 0
இலங்கை செய்திகள்

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை.!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 23 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள்…

79 0 0
இலங்கை செய்திகள்

யானை தாக்கி சுற்றுலா வழிகாட்டி உ**யிரிழப்பு.!

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்த விகாரை வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த யானை தாக்கியதில் காயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்…

86 0 0