உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மகாநாயக்க தேரர்களின் தலையீட்டினால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது விகாரமகாதேவி பூங்கா போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
89 பார்வைகள்

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 10 நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த, சிறையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் சத்தியாக்கிரகப் போராட்டம், மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அரசுடனான பேச்சுகள் மூலம் ஞானசார தேரரின் விடுதலையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மகாநாயக்க தேரர்கள் போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று  உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பாக உரிய அரச அதிகாரிகளுடன் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் தற்போது உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகாநாயக்க தேரர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற எழுத்துமூல உறுதியளிப்பு மற்றும் கோரிக்கையை மதித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடத் தீர்மானித்தனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம், கொழும்பு மாநகர சபை மற்றும் பொலிஸாரினால் விகாரமகாதேவி பூங்காவில் விதிக்கப்பட்ட பல்வேறு சட்டக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசைக் கவிழ்க்க மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தாதீர்!

நாட்டில் தற்போது அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில், சில மதத் தலைவர்கள் தவறான நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றனர் என்று தோட்டக் கட்டமைப்பு மற்றும் சமூக…

78 0 0
இலங்கை செய்திகள்

பிக்குகள் துறவற ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும்! – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

பௌத்த பிக்குகள் தங்களது துறவற ஒழுக்கத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, பௌத்த சாசனத்தின் கண்ணியத்தையும் மகா சங்கத்தினருக்குச் சமூகத்தில் வழங்கப்படும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதான பௌத்த…

84 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறையைக் கையாண்டால் கொடூரமான எதிர்வினை வெடிக்கும் : சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

அரசு ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில்களே கிடைக்கும் என்றும், அதற்கு மாறாக அடக்குமுறைகளைப் பயன்படுத்தினால் கொடூரமான எதிர்வினைகளே உருவாகும் என்றும் ஐக்கிய குடியரசு…

94 0 0
இலங்கை செய்திகள்

நகத்தால் வெட்ட வேண்டியதை கோடரி வரை கொண்டு செல்லாதீர் – ஸ்ரீ சமந்தபத்ர தேரர் எச்சரிக்கை

மக்களுக்கு நேரடியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சென்று தங்களது பிரச்சினைகளையும் துயரங்களையும் தெரிவிக்க முடியாத சூழ்நிலையே நாட்டில் காணப்படுகின்றது என்று ஸ்ரீ சமந்தபத்ர தேரர் கடுமையாகக் குற்றம்…

88 0 0